கீழக்கரையில் தேசியகுடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மனித சங்கிலி போராட்டம்…வீடியோ.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத்திய அரசு அமல்படுத்திய தேசிய குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கீழக்கரை கிராம நிர்வாக அலுவலகம் முன் தொடங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்திற்கு தமிழக ஒற்றுமை மேடை கீழக்கரை  ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், உலாமா சபை  அப்துல் மன்னான், கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பை, அனைத்து சமுதாய, சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகளர என அனைவரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

IMG_6243 IMG_6245

இப்போராட்டத்திற்கு கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!