மக்கள் பிரச்சினையை கருத்தில் கொள்ளாத கீழக்கரை மின்சார வாரியம்..

கீழக்கரையில் பல வருடங்களாக பழைய பேருந்து காவல்நிலையம் அருகே இயங்கி வந்த மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகம் சில வருடங்களுக்கு முன்பு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

இது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழக்கரையில உள்ள அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து 2013ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அருகே மக்களுக்காக மின்சார கட்டணம் செலுத்த கட்டிட வசதியை செய்து கொடுத்தனர். ஆனா‌ல் சில நாட்கள் மட்டும் உபயோப்படுத்திவிட்டு மின்சார வாரியத்தினர் அடைத்து விட்டனர்.

ஆனால் மக்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அந்த இடம் இப்பொழுது நகராட்சியின் பொருட்கள் வைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது மிகவும் வேதனையான விசயம். கீழக்கரையில் உள்ள பல சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. மின்சார வாரியம் மக்களின் பிரச்சினைக்கு செவி சாய்க்குமா?? மக்களின் குறை தீருமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!