ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் ரீதியாகவும், வேலை நிமித்தமாகவும் கீழக்கரையில் உள்ள பல தெருக்களைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அனைவரும் அவர்கள் தெருக்கள் சார்ந்த விசயங்களுக்கு ஒன்று சேர்ந்து பல நற்பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பல இடங்களில் பரவிக்கிடக்கும் கீழக்கரை மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கில் கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின், நஜீம், நசுருதீன் மற்றும் பரக்கத் அலி ஆகியோரின் முயற்சியில் இன்று (09-02-2018-வெள்ளிக்கிழமை) துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் கீழக்கரை மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு மகிழ்வு சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக அதிகாலை முதலே களத்தில் இறங்கிய ஏற்பாட்டாளர்கள் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியவர்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் மக்கள் காலை 09.00 மணி முதலே வரத் தொடங்கினர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அறிமுகங்கள், பின்னர் தொழுகை, விளையாட்டுக்கள், கருத்து பரிமாற்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மன நிறைவுடனும், மகிழ்வுடனும் இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் முழு வீடியோ பதிவு கீழை நீயூஸ் youtube சேனலில் விரைவில் வெளியிடப்படும்.
புகைப்படத்தொகுப்பு..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print
























