கீழக்கரை நகராட்சியின் மெத்தனம்.. பள்ளத்தில் விழும் வாகனங்கள்..

கீழக்கரையில் சாக்கடை அடைப்பால் சுகாதார கேடு என்பது, கீழக்கரைக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே கூறலாம். எத்தனை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பதவிக்கு வந்தாலும் பொதுமக்களின் கவனக்குறைவு என்று தட்டிகழத்து விட்டு செல்கிறார்களே தவிர அதற்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பதில்லை. அதை வட கொடுமை கழிவை சீர் செய்யும் பணிகளையும் முறையாக செய்யாத காரணத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில்  வடக்குத்தெரு தைக்கா அருகில் கடந்த பல நாட்களாக கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீர் வழிந்து ஓடி கிடந்தது,  இதை சரி செய்ய கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் ரோடு ஓரத்தில்  நான்கு குழிகளை நகராட்சி ஊழியர்கள் தோண்டி அடைப்பை எடுத்து விட்டு அந்த குழிகளை மூடாமலே சென்று விட்டனர்.

இன்று (16:06/2020) இரவு இந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று  குழியில் விழுந்து பழுதாகியது மட்டுமல்லாமல் அவ்வழியில் பிற வாகனம் செல்லவும் தடங்கல் ஏற்பட்டது. . சுமார் பதினைந்து நாட்களாக நகரின் பிரதான சாலையான வடக்குத்தெரு சாலையில் இருக்கும் இந்த குழிகளை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்குத்தெரு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொருளாளர் அன்வர்தீன் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!