கீழக்கரையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல்ஜதீத் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி கீழக்கரை வடக்குத் தெரு மணமேடு திடலில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

முதல் பரிசுகளை வென்ற மீரான் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் பரிசு வழங்கி கவுரவித்தார், சிறந்த ஆட்டநாயகனுக்கான பரிசை பாரிஸ்க்கு கீழக்கரை மக்தூமிய பள்ளியின் தாளாளர் இப்த்திக்கார் ஹசன் வழங்கி கௌரவப் படுத்தினார்.

சிறந்த பந்து வீச்சாளர்கான பரிசை சீனி கருணைக்கு சமூக ஆர்வலர் நசுருதீன் வழங்கி கௌரவப் படுத்தினார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அல்ஜதீத் கிரிக்கெட் கிளப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!