கீழக்கரை பேரூந்து நிலையத்தில் மராமத்து பணி?.. கடைகளை 24 மணி நேரத்தில் காலி செய்ய உத்தரவு..

கீழக்கரை நகராட்சித்துறையின் பராமரிப்பில் உள்ளது புதிய பஸ் நிலையம். இந்த புதிய பஸ் நிலையத்திற்குள் பல கடைகள் குத்தகைக்கு விடப்பட்டு கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் குத்தகை பணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் வாங்கும் பணத்திற்கு பராமாரிப்பு பணி நகராட்சியினால் செய்யப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை.

இங்கு கடைகள் கட்டப்பட்ட காலம் முதல் கடைக்காரர்களே சிறுசிறு வேலைகளை செய்து அங்கு தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடைகளின் உட்புறம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது, பல முறை நகராட்சியும் கடைகளை காலி செய்ய முயற்சித்தது.  ஆனாலும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் சாக்கு போக்கு சொல்லி காலம் கடத்தி வந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன் ஒரு கடையின் உள்புறம் மேற்கூரை பெயர்ந்து விழுந்துவிட்டது. ஆனாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

இச்சம்பவத்தை தொடர்ந்து துரித நடவடிக்கையாக அங்குள்ள 9 கடைகளை 24மணி நேரத்திற்குள் காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் கடைகளின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால்  விரைவில் கீழ்க்கரை பஸ் நிலையத்திற்குள் புதிய கடைகளோ அல்லது  மராமத்து பணிகளோ நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

தகவல்:-  மக்கள் டீம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!