கீழக்கரையில் ரமலான் மாதத்தில் தொடரும் இருசக்கர வாகன விபத்து ..

கீழக்கரை முள்ளிவாடி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு இளம் வாலிபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இருவரும் வடக்குத் தெருவைச் சார்ந்தவர்கள். மஹ்சின் (வயது.17), தகப்பனார் பெயர்.தாஜுதீன், சராஃபத் (வயது.17), தகப்பனார் பெயர்.சபீர் அகமது. விபத்துக்குள்ளான இருவரும் உடனடியாக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சராஃபத் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் உடனடியாக மதுரையில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மஹ்சின் என்பவருக்கு கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவரையும் மதுரைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விபத்தை ஏர்வாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தின் காரணத்தை பயணித்தவர்களால் சாலையில் கிடந்த கற்களின் மீது ஏறியதனால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஏதேனும் கடந்து சென்ற வாகத்தினால் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!