கீழக்கரை இஸ்லாமியா பைத்துல்மால் சார்பாக “நேசக்கரம் உதவி திட்டம்”…

06.08.2019 கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் ‘நேசக்கரம் உதவி திட்டம்’ தொடக்க விழா பைத்துல்மாலின் செயலக வளாகத்தில் நடைபெற்றது. பொருளாளர் ஹாஜி காதர் செய்யது இப்ராஹீம் கிராஅத் ஓதிட துணைச் செயலாளர் முகைதீன் தம்பி வரவேற்புரையுடன் தொடங்கியது.

கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் செயலகத்தில் தலைவர் ஹாஜி சாதிக் அலி தலைமை வகித்து. ‘நேசக்கரம் உதவித் திட்டம்’ பற்றி விளக்கினார். துணைத்தலைவர் ஹாஜி ஹபீபுல்லாஹ் பைத்துல்மால் செயல்பாடு குறித்து பேசினார்.

அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் நோயினால் சிறமப்படுபவர்களுக்கு மாத உதவியாக ரூபாய் 2000 வீதம் வழங்கும் ‘நேசக்கரம் திட்டம்’ புதிதாக நடைமுறைபடுத்தப்பட்டது. ஹாஜி சாதிக், தலைவர் சாதிக் அலி ,துணை தலைவர் ஹாஜி ஹபீபுல்லாஹ் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா , கீழக்கரை அரசு மருத்துவர் டாக்டர் கண்ணதாசன், கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ஜலாலுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள்

முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி முஹம்மது அபூபக்கர் நிறைவுரை ஆற்றினார்கள் பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் நன்றி கூறினார். செயற்குழு (ஸ்தாபக) உறுப்பினர் டவுன் காஜி மௌலவி காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்தீக்கீ வாழ்த்துரையிடன் துஆ ஓதிட கூட்டம் நிறைவுபெற்றது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!