கீழக்கரையில் தொடரும் போராட்டம்… குடிநீர் பிரச்சினை தீர்க்க… மதுக்கடைகள் அகற்ற… ஆட்சியரிடம் மனு…தேவையுள்ள குடிநீரையும்,தேவையற்ற குடி (மது) நீர் சம்பந்தமாக கீழக்கரை சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கீழக்கரையில்தற்போதுநிலவும்குடிநீர்தட்டுப்பாடு,தடையில்லாமல் கிடைக்கும் மது இதனால் கீழக்கரை மக்கள் படும் அவதியை கருதி கீழக்கரை சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள். இது சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புக்கழகம்,S D P I கட்சி, மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை,இஸ்லாமிய கல்வி சங்கம், வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை,விடுதலை சிறுத்தைகள் கட்சி, போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம், வீரகுல தமிழர் படை மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக மனு வழங்கப்பட்டது.





You must be logged in to post a comment.