கீழக்கரையில் விதிமுறைகளுக்கு முரணாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு மதுபானக்கடைகளை அகற்ற கோரி இன்று பகல் 2 மணியளவில் அனைத்து சமூக,சமுதாய அமைப்பு, கீழக்கரை வர்தகர்கள் சங்கம் சார்பாக கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கீழக்கரை துணை வட்டாச்சியர், கீழக்கரை சரகம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கீழ்கண்டவாறு மனு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இரண்டு மதுபான கடைகளும் பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் அருகில் நகரின் பிரதான பேரூந்து நிலையம்,அரசு,தனியார் மருத்துவமனைகள்,குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் இந்த மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்களுக்கு இந்த மதுபான கடைகளால் தொடந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.
இந்த கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதை அதிகமாகி வாகனங்கள் அதிகமாக செல்லும் பிரதான சாலையில் கிடப்பதால் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்து ஆகும் நிலை ஏற்படுவதோடு,மது பிரியர்கள் ஆடைகள் விலகி கிடப்பதால் இந்த பகுதியில் நடமாடும் பெண்கள்,பள்ளி மாணவிகள் மனசஞ்சலத்தோடு இப்பாதையை கடந்து செல்கிறார்கள்.எனவே!சமூகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த இரண்டு மதுபான கடைகளை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












