கீழக்கரை கடற்கரைப் பகுதியில் காலை நேரத்தில் உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் மூலமாக கீழக்கரை மற்றும் முத்துப்பேட்டையில் உலகப்பெருங்கடல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை முன்னிட்டு கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் சுற்றுச்சூழல்குழு உறுப்பினர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடல்களின் முக்கியத்துவம் பற்றியும் அதனை மாசில்லாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றுவனச்சரகர் பா.ஜெபஸ் எடுத்துரைத்தார். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் உலகப் பெருங்கடல் -2018ம் ஆண்டின் கருப்பொருளான பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தடுத்தல் மற்றும் ஆரோக்கியமான பெருங்கடலுக்கான தீர்வுகளை உண்டாக்குதல் என்பதன் அடிப்படையில் கலங்கரை விளக்கம் பகுதி மற்றும் கீழக்கரை கடற்கரைப் பகுதியினை சுத்தம் செய்தனர்.
அதே போல் மாலை நேரத்தில் முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கடலின் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் சுமார் 50 பள்ளி மாணவர்கள் மூலமாக இந்திராநகர் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கிராமப் பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்கழு உறுப்பினர்களுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை ஏர்வாடி வனவர் கனகராஜ், கீழக்கரை வனவர் அருண்பிரகாஷ் மற்றும் திட்டக் களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்து ஒருங்கிணைந்து செயல்படுத்தினார்கள்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












