ஜல்லிக்கட்டு … தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இன்று அதிகமாக பேசப்படும் வார்த்தை இதுதான்… பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்கி போராடி வருகினரறனர்.
இந்நிலையில் இன்று கீழக்கரையில் உள்ள பல முக்கிய பிரமுகர்களால் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

தற்பொழுது கீழக்கரையில் ஞாயிறு-15-01-2017, மாலை 3.00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழனின் வீர விளையாட்டை காண தமிழ் உணர்வுள்ள அனைவரும் வாரீர்.. வாரீர் என்று கூறப்பட்டுள்ளது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Jallikattu islathukku ethiranathu….kilakaraiyil nadatha entha oru muslimum virumba maatan….
Nadatha ..nadatha pogum muslimgal allahvukku anji kollungal…………allahvudàya sabatthai petruvidatheergal