தலைமை இல்லாமல் தடுமாறும் கீழக்கரை நகராட்சி ..

தமிழகத்தில் கீழ்நிலை ஊழியர்களால் செயல்படுத்தப்படும் ஓரே நகராட்சி, கீழக்கரை நகராட்சியாக மட்டுமே இருக்க முடியும். நகராட்சி ஆணையர் கிடையாது, சுகாதார ஆய்வாளர் கிடையாது, வருவாய் அதிகாரியும் நிலை கிடையாது, கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரியும் நிலை கிடையாது. கேள்வி கேட்டால் பதில் கூற அதிகாரிகள் கிடையாது. வரி வசூல் பாக்கி, பொதுமக்கள் ஒத்துழைப்பு கிடையாது என்று பொதுமக்கள் மீது பழி, ஆனால் வரி செலுத்த வந்தால் பணம் வசூல் செய்ய அலுவலகத்தில் ஆள் கிடையாது. இதுதான் இன்றைய தாலுகா அந்தஸ்தில் இருக்கும் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தின் நிலை.

அதே போல் பல சேவை மையங்கள் அமைந்து இருந்தாலும் அனைத்து மையங்களும் “மய்யமாகவே” எந்த செயல்படும் இன்றியே கிடக்கிறது.

இன்று (13-03-2018) தன் மகளுக்காக ஆதார் அட்டை எடுக்க ஆதார் மையத்துக்கு சென்ற ஹுசைன் என்பவர் கூறுகையில் “ நேற்று ஆதார் மையம் விபரம் கேட்க நகராட்சி அலுவலகத்தில் கீழ் இருந்து, மேல் மாடிக்கு செல்ல சொன்னார்கள், அங்கு சென்ற பின்பு கீழ் தளத்தில் உள்ள வடது புறம் உள்ள அலுவலகத்துக்கு செல்ல சொன்னார்கள், அங்கு சென்ற பின்பு நகராட்சி அலுவலகத்தின் வெளியே அமைந்துள்ள அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார்கள், பின்னர் அங்கு சென்ற பொழுது ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த விபரமும் தெரியாது என்று மீண்டும் நகராட்சி அலுவலகத்துக்கே செல்லுமாறு எரிச்சலூட்டினார்கள், ஆகையால் கோபத்தில் திட்டி விட்டு வந்து விட்டேன், மீண்டும் இன்று வந்துள்ளேன், இப்பொழுதும் அதிகாரிகள் அவர்களிடம் உள்ள குறையை நீக்க முயற்சிக்காமல், நேற்று நான் கடுமையாக பேசிய வார்த்தைகளைதான் கூறுகிறார்கள். என்று நம் ஊர் நகராட்சிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை” என ஆதங்கத்துடன் கூறினார்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற ரீதியில் அதிகாரிகள் இல்லாத அலுவலகத்தில் அனைவருமே அதிகாரிகள் நிலமைதான் கீழக்கரை நகராட்சியில். அரசியல்வாதிகள் பொறுப்பில் இருந்தாலும் அதிகாரிகள் பொறுப்புக்கு வந்தாலும், காட்சிகள் மட்டும் மாறாது என்பதே நிதர்சன உண்மையாக தெரிகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “தலைமை இல்லாமல் தடுமாறும் கீழக்கரை நகராட்சி ..

  1. நகராட்சியில் ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கின்றது…
    கீழக்கரை நகர் sdpi. கட்சி சாரபக் பல மனுக்கள் கொடுத்து பணிகள் நடை பெறாமல் இருக்கின்றது.இந்த நிலை தொடர்ந்தால் sdpi. கட்சி சார்பாக கண்டான போஸ்டர் கள் அடித்து ஒட்டபடும்…கீழக்கரை நகர் sdpi. கட்சி.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!