கீழக்கரையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள், மற்றும் பொது இடங்களில் சிறப்பு தொழுகை  நடைபெற்றது.  இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடினர். சிறப்பு தொழுகையில் இறைவனை வணங்கி அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்தனர் . குறிப்பாக இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடந்த 30 நாட்கள் நோன்பை கடைபிடித்து  இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இம்மாதத்தில் இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பு திகழ்கிறது. மேலும் நோன்பின் மூலம் பசித்திருத்தல் இறை வணக்கம் செலுத்துதல் ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் செலுத்துதல் பிறர் பசியை உணர்தல் போன்ற பல்வேறு நல்ல செயல்கள் இதன் மூலம் கடைபிடிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!