கீழக்கரையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது வரவேற்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேரனாக அவருடன் பேசியதுண்டு பழகியதுண்டு காணொளி காட்சி மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு களித்த துண்டு ஆனால் நான் தந்தை பெரியார்.பேரறிஞர் அண்ணா அவர்களுடன். பேசியதோ பழகியதோ கிடையாது ஆனால் இங்கு வந்திருக்கும் கழகம் முன்னோடிகளோ பெரியாருடனும் பேரறிஞர் அண்ணாவுடனும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெற்றவர்கள் வந்திருக்கிறீர்கள் அதனால் நான் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னை பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தங்களுடைய குடும்ப உறவுகளின் பல்வேறு விழாக்களுக்கும் அழைக்கின்றனர் அவர்களிடம் எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றை ஒன்று மட்டும் தான் என்னை எந்த விழாவிற்கு வேண்டுமென்றால் அழையுங்கள் நான் கட்டாயம் வருவேன் ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்முடைய கழகம் முன்னோடிகளை சந்தித்து அவர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை தற்சமயம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு பொற்கிழிகளை வழங்கி வருகிறேன் இது மட்டுமில்லாமல் திமுக சார்பில் பல்வேறு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார் இந்நிகழ்ச்சியில் ஆயிரத்து இரண்டு நபர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன மேலும் இதில் மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் அயலக அணி மாவட்ட தலைவர் முஹம்மது அனிபா அயலக அணி மாவட்டத் துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் மற்றும் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!