கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழக்கரை சதக் கல்லூரி அரங்கத்தில் கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை ( Kilakkarai Development Trust) சார்பாக பல கீழக்கரை பிரமுகர்களின் முன்னிலையில் கீழக்கரை அபிவிருத்தி திட்டம் அறக்கட்டளையின் அறங்காவலர் அப்துர்ரஹ்மான் புகாரி தலைமயில் ஆரம்பம் செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட அரசியல் இடையூறு காரணமாக அத்திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இத்திட்டம் சம்பந்தமான 12வது ஆலோசனை மற்றும் நிர்வாக கூட்டம் 02-07-2017 அன்று கீழக்கரையில் நடைபெற்றது. இக்கூட்டம் கீpழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் அப்துர்ரஹ்மான புகாரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழக்கரை பல ஜமாத் முன்னனி பிரமுகர்கள் மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர் அகமது, முரளி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வளர்ச்சிக்கான கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் தற்பொழுது கடற்கரை சாலையில் நடைபெற்று வரம் சாலைப் பணிகளை பாதுகாக்கும் வiகியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உயரப்படுத்தி கடல் அரிப்புகளில் இருந்து தடுப்பதற்கான முயற்சிகள் எடுப்பது மற்றும் கல்லூரி பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்போடு முழுவீச்சில் கீழக்கரை நகரை சுத்தப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி சேக்தாவூது சிறப்பாக செய்து இருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் அப்துர்ரஹ்மான் புஹாரி அமெரிக்காவைத் தலைமையாக கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான் பில்கேட்ஸ் மூலமாக நடத்தப்படடும் கேட்ஸ் பவுன்டேசன் (GATES FOUNDATION) சார்பாக ஊட்டி மற்றும் கீழக்கரை அபிவிருத்தி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான உதவிகளை கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக செயல்படுத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அறியப்படுகிறது.
http://www.gatesfoundation.org/How-We-Work
இத்திட்டம் எந்த ஊழல் கரைப்படிந்தவர்களின் ஊடுருவல் இல்லாமல் செயல்படுத்தப்படும் பட்சத்தில் கீழக்கரை நகர் நிச்சயமாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திட்டத்தின் வள்ர்ச்சியை ஆர்வத்துடன் பொறுத்திருந்து பார்ப்போம். இது சம்பந்தமான செய்தியை நம் இணையதளத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
https://keelainews.in/2016/12/26/kdt/

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










நல்ல ஆரம்பம், இத்திட்டம் சிறக்க என் வாழ்த்துக்கள்.