என் ஊர்… அது கிராமமாக இருக்கட்டும், மாநகராக இருக்கட்டும். என் சொந்த ஊர் என்று சொல்லும் வார்த்தையிலேயே ஒரு மன மகிழ்வு நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எற்படும்.
அதுபோல் கீழக்கரை மாநகருக்கு பல நூற்றாண்டு சரித்திரம் உண்டு பல வள்ளல்களையும், தன் வந்தர்களையும், சமூக சிந்தனையாற்றல் உள்ளவர்களையும், கல்வியாளர்களையும் கொண்ட மற்றும் உருவாக்கிய ஊர் என்றால் மிகையாகாது. அந்த சரித்திரம் இன்று வரை தொடர்கிறது என்பதில் கீழக்கரையைச் சார்ந்த அனைவருக்கும் பெருமிதமே.
இன்று ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு குறியீடு கொடுத்து கொண்டாடி வரும் வேளையில் கீழக்கரை உருவான தினம் என அரசாங்க பதிவேடுகிளில் குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 3ம் தேதியை கீழக்கரை தினம் என சமூக வலைதளங்களில் கீழக்கரையின் பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை நகைச்சுவையுடன் எடுத்து கூறும் #stylishkilakkarai @Riffu221 மற்றும் இன்னும் பிற சகோதரர்களின் முயற்சி மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இத்தருணத்தில் நாமும் கீழக்கரை தினத்தை நினைவு கூறுவதோடு, இன்று (டிசம்பர் 3) மாற்றுதிறனாளிகளின் தினம் என்பதால் அவர்களின் வாழ்வு மேம்பட நம்மால் இயன்ற உதவிகளை செய்ய உறுதிமொழி ஏற்போம்.
மேலும் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் கடும் மழையால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவுவது மூலமும் நாம் ஊரின் பெருமையை பறைசாற்றுவோம்.
Special Thanks to #stylishkilakkarai





You must be logged in to post a comment.