‘Kilakarai Tourism’ சார்பாக அழகிய முறையில் செய்து முடிக்கப்பட்ட கடற்கரை மேம்பாட்டு திட்டம்..வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு ..

கீழக்கரையை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனம் “Kilakarai Tourism”.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை கடற்கரையை மேம்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை உருவாக்கி நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அனுமதியும் பெற்றனர்.

இத்திட்டத்திற்காக பல தன்னார்வ நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தனி நபர்கள் என நிதி உதவி அளித்தனர். அந்நிதி உதவியுடன் சில தினங்களுக்கு முன்னர் கலங்கரை விளக்கம் கதவு எண்1 முதல் நஜுமுதீன் டீக்கடை வரை மேம்பாட்டு பணிகளை செய்து முடித்துள்ளனர். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது).

இது போன்ற கீழக்கரை வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்கும் தன்னார்வ அமைப்புகளை ஊக்குவிப்பது மூலம் ஒட்டு மொத்த கீழக்கரை நகரையே மேம்படுத்தலாம்.  இப்பணியில் ஈடுபட்ட Kilakarai Tourism நிறுவனத்தை கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!