ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை சந்திப்பிலிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி சீதக்காதி சாலை வழியாக கீழக்கரை நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் சிறுவர் சிறுமியர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் செய்து அசத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









