ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டது. முன்னதாக, வட்டாட்சியர் ஜமால் முஹம்மது, தலைமை நில அளவர் வினோத் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்ரமிப்புகளை சரியான முறையில் அளவீடு செய்து, ஆக்ரமிப்பு செய்தவர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு வியாபாரிகள், பொதுமக்களை அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் அகற்ற முன்வராததால் இன்று கீழக்கரை போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர், நகர் அமைப்பு பிரிவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட கீழக்கரை முக்கு ரோடு முதல் கடற்கரை வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளவும், தவறும் பட்சத்தில் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் வட்டாட்சியர் ஜமால் முஹம்மது தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக ஆற்றினர். மேலும் இது குறித்து கூறிய கீழக்கரை வட்டாட்சியர்., தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களுடைய உடமைகளும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் நகராட்சி துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
.
You must be logged in to post a comment.