ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் துணைத் தலைவர் அஜ்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளரும் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளரும் கீழக்கரை நகராட்சியின் 19வது வார்டு உறுப்பினருமான சப்ராஸ் நவாஸ் என்பவரை சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பிய முத்து வாப்பா கீழக்கரை விசுவாசி போன்ற பெயரில் கள்ளத்தனமாக ஐடி உருவாக்கி அவதூறு பரப்பிய நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளருக்கு முழு ஆதரவு வழங்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளனர். இதுபோன்று சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனம் செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

You must be logged in to post a comment.