ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே வேனை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்தனர் அதில் தலா 30 கிலோ எடையுள்ள 80 மூடை 2400 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது அதனை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் இவை அனைத்தும் படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது இலங்கைக்கு கடத்துவதற்காக இவற்றை கொண்டு வந்த கடத்தல் காரர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ! தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு .!!
You must be logged in to post a comment.