கீழக்கரையில் ஜமபந்தி முகாம் ! பொதுமக்களுக்கு வட்டாட்சியர் அழைப்பு !! 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 11.06.2024 முதல் ஜமபந்தி முகாம் துவங்கப்பட்டது. இதில் திரு உத்திரகோசமங்கை உள் வட்டத்தை சார்ந்த எக்ககுடி , பனைக்குளம் , மாலங்குடி ,மள்ளல், ஆலங்குளம் , திரு உத்தரகோசமங்கை , நல்லிருக்கை போன்ற கிராமங்களுக்கு முகாம் நடைபெற்றது . ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜுன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் . இதில் கிராம கணக்குகள் குறித்து தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தாங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் கொடுக்கலாம். மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும் எனவே நாளை 12.06.2024  அன்று கீழக்கரை வட்டத்திற்கு உட்பட்ட  இதம்பாடல் வேளானூர் மாணிக்கனேரி புல்லந்தை  மாயாகுளம்  ஏர்வாடி காஞ்சிரகுடி கீழக்கரை போன்ற கிராமங்களுக்கு ஜமபந்தி முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!