ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் பாராற்றுச் சான்றிதழ்களையும் வழங்கினர். இவ்விழாவிற்கு உலமாக்களும், ஜமாத்தார்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.