கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறைவு.!

 

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்வாரியத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதாகவும் இது தொடர்பாக மக்கள் நல பாதுகாப்பு கழக அமைப்பு சார்பில் தமிழக முதல்வர், தமிழக மின்சார துறை அமைச்சர், தமிழக மின்சார துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு மூலம் அனுப்பி உள்ளதாகவும் மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில்

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்சார வாரிய அலுவலகத்தின் வரம்பில் மின் மண்டலங்கள் *17 லாக பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.* இந்த அனைத்து மண்டலங்களில் சுமார் *21701 மின் இணைப்புகள்* பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுமார் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகளை உள்ளடக்கிய கீழக்கரை மின்சார வாரிய அலுவலகத்தில் *மின் அளவு கணக்கீட்டு பணிக்காக 1 நிரந்தர பணியாளர் 2 ஒப்பந்த பணியாளர்கள் என்று 3 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றார்கள்.*

 

 தமிழ்நாடு மின்சார வாரிய விதிப்படி மின் கணக்கீட்டு முறையை 60 நாட்களுக்கு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையால் பல்வேறு மின் கணக்கீட்டு அளவை 60 நாட்கள் கடந்த பதிவு செய்வதால் மின் நுகர்வோர்கள் தேவையில்லாமல் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

 

இந்த மின்சார வாரிய அலுவலகத்தின் 2023 ஏப்ரல் 1 ம்தேதி முதல் 2024 மார்ச் 31 ம்தேதி வரை *சுமார் 15 கோடியே 99 லட்சம்* த்திற்கும் அதிகமான தொகை ஆண்டு வருமானமாக இருக்கிறது.

 

கீழக்கரை மின் வாரிய வரம்பிற்கு உள்பட்டு கீழக்கரை முழுவதும், 500 பிளேட் ,பட்டாணியப்பா,பெரிய காடு, சின்ன மாயகுளம்,மருதன் தோப்பு, மோர்குளம் மற்றும் பாளையோந்தல், தில்லையோந்தல் என்று பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய மின் நிலையமாக இந்த மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த *17 மண்டலங்களிலும் சுமார் 3000 க்கும்* அதிகமான மின் கம்பங்கள் இருக்கின்றது. இந்த நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் நிரந்தர மின் லைன்மேன்கள் யாரும் பணியில் இருப்பது இல்லை. ஐந்து ஒப்பந்த லைன்மேன்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றார்கள்.

 

எனவே மின் நுகர்வோர்களின் நலன் கருதி கீழக்கரை மின்வாரியத்துறை அலுவலகத்திற்கு கூடுதல் மின் கணக்கீட்டு பணியாளர்களையும், கூடுதல் நிரந்தர லைன் மேன்களையும் பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும், எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!