ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நுகர்வோர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் முதல் தீரமானமாக 2023 2024வது ஆண்டு தணிக்கை அறிக்கை ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது . தொடர்ந்து தலைவர் எம் சையது இப்ராஹிம் உப தலைவர் பிலால் அப்துல்லா உப தலைவர் கோவிந்தராஜ் செயலாளராக பாக்கர் அலி இணை செயலாளர் ஜாகிர் உசேன் பொருளாளராக விஜயராமு நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் முகமது யூசுப். முத்துசாமி. மலராஜ். லெமன் ராஜ் அமிதா பேகம். வல்கீஸ் பீவி. 2024 இருந்து 20 27 வரை புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மேலும் இராமநாதபுரம் மாவட்டம் ரயில்வே பாலம் பொது மக்களின் நலன் கருதி உடனே பயன்பாட்டுக் கொண்டு வரவும் , கீழக்கரை அரசு கட்டடத்தில் நூலகம் உடனே அமைக்கப்பட வேண்டும் என்றும் , கீழக்கரை புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து புற நகர் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் ,புதிய நிர்வாகி மூலமாக வங்கிக் கணக்கு வரவு செலவு செய்ய வேண்டும் என்றும் ,அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா கேரி பைகள் போன்றவைகள் மீது துறை ரீதியாக துரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
.
You must be logged in to post a comment.