ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்க தலைவர் முகமது நசுருதீன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் காளீஸ்வரன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி , மருத்துவர் அனீஸ் பாத்திமா, அஹமது பசீர்தீன் , கஃபார்கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

You must be logged in to post a comment.