நவீன முறையில் கீழக்கரை பெருமை பேசும் “KILAKARAI ANTHEM”…. 11/04/2021 அன்று வெளியீடு..

கீழக்கரையின் பெருமையை விளக்கும் வண்ணம் பல வரலாற்று ஆய்வுகள், புத்தகங்கள் என வெளிவந்திருந்தாலும், இன்று இளைய தலைமுறையை கவரும் வண்ணம் “ராப்” வகையில் கீழக்கரை பழக்க வழக்கங்கள், உணவு முறை, கலாச்சாரம்,  உடுத்தும் உடை முறை, நட்பின் ஆழம் என பலதரப்பட்ட விசயங்களை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் கூறியுள்ளனர்.

இந்த படைப்பை கீழக்கரையைச் சார்ந்த காதர் மற்றும் அப்துர் ரஹ்மான் என இரு இளைஞர்கள் பல மாத உழைப்புகளுடன் முயற்சி செய்துள்ளனர். இது சம்பந்தமாக காதர் கூறுகையில், “கீழக்கரையில் எந்த ஊரிலும் இல்லாத தனித்தன்மை அனைத்து செயல்பாடுகளிலும் உள்ளது, அதை கீழக்கரையைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

இந்த KILAKKARAI ANTHEM வரும் ஞாயிறு (11/04/2021) அன்று ACTIONKLK youtube channelல் காலை 11.00 மணியளவில் வெளியிடப்படுகிறது. அதன் விபரம் கீழே:-

https://www.youtube.com/channel/UCUjWl2vUogHnCSn-pWVa1vA  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!