ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்திருக்கும் 18 வாலிபர்கள் தர்ஹாவின் 850ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜமாத் தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஜூன் 7 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக 18 நாட்கள் மௌலித் என்றும் ( புகழ் மாழை) ஓதி உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவான இன்று முஹம்மது காசிம் இஸ்லாமிய இசை கச்சேரி தர்காவின் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை மௌலித் என்றும் ( புகழ் மாழை) ஓதி உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு ஆயிரம் கிலோ அரிசி நெய் சோறு சமைத்து ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவினை தர்ஹாவின் விழா குழு உறுப்பினர்கள் அப்துல் ஜப்பார், சாகுல் ஹமீது ,சீனி முஹம்மது, முபாரக், சபீக், சுல்தான், ஹபீப் நைனா, ஃபாஹிர், நசுருதீன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

You must be logged in to post a comment.