இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் நான்கு ரோடு சந்திப்பில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனை ஈடுபடும் பொழுது. சந்தேகப்படும்படி வந்த (TN59 BX 5584 ) என்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 25 மூட்டைகளில் சுமார் 750 கிலோ ரேசன் துவரம் பருப்பு கண்டறியப்பட்டது. அதை கடத்தி வந்த இரு நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஆனைக்குழாய் பகுதியைச் சேர்ந்த செபஸ்டீன் (56) த/பெ பாக்கியம் மற்றும் மைக்கேல்ராஜ் (29) த/பெ செபஸ்டீன் என்றும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர். இச்சோதனையில் தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









