கேலோ இந்தியா வாலிபால் போட்டி! தமிழக அணியில் முதல் இடம் பிடித்த சித்தார்கோட்டை பள்ளி மாணவருக்கு பாராட்டு..
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இளைஞர் நலன், விளையாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜன.19 ல் தொடங்கி வைத்தார். இதில் நடந்த ஆடவர் வாலிபால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி ஹரியானா அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. தமிழக அணியில் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை முஹமதியா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், நெல்லை விளையாட்டு விடுதி வாலிபால் ஆட்ட வீரருமான அஹமது வஃபிக் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் அஹமது வஃபிக்கை ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, முஹமதியா பள்ளி தாளாளர் அஹமது கபீர், தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி, உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ் பாபு, ஷாஜகான் சலீம், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாவட்ட செயலர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் கனி உள்ளிட்டோர் பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









