இராமநாதபுரம், அக்.2-
இராமநாதபுரம் காதி கிராப்ட் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
காந்தி ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் காதி கிராப்ட் நிறுவனத்தில் காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து அவர் கூறுகையில், மகாத்மா காந்தியடிகளின் நினைவாக கதர் ஆடைகளை அனைவரும் பயன்படுத்தும் விதமாக கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கதர் கிராம வாரியம் மூலம் நவீன தொழிநுட்பத்தில் புதிய கைத்தறி ஆடைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகிறது. 
மக்களின் தேவை அறிந்து கதர் விற்பனை நிலையங்களில் பல்வேறு வகை கதர் ரகங்கள் பாலியஸ்டர் ரகங்கள், பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள், தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், துண்டு வகைகள் அதிகளவு தயாரிக்து விற்கப்படுகிறது. கதர் கிராம தொழில் நிறுவனம் மூலம் சந்தன மாலை, சாம்பிராணி ஜவ்வாது, குளியல், சலவை சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயாரித்து விற்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு மக்கள் ஆதரவுடன் எட்டப்பட்டது. நடப்பு ஆண்டிற்கு ரூ.1 கோடி லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை காட்டிலும் கூடுதலாக எய்திடும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கதர் ஆடைகளை பயன்படுத்தி கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். கதர் கிராம உதவி இயக்குநர் முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயக்குமார், ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், கதர் கிராம அலுவலக கண்காணிப்பாளர்கள் சதீஷ்குமார், பால்ராஜ், இமாம் உசேன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









