உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிடாய் முட்டு போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் முன்பு கிராம மக்கள் சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு கிடா முட்டு போட்டி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குரும்பை, சின்னகருப்பு, வெள்ளைமறை, கண் செவலை, சீனு குரும்பை, பால்டப்பா பருமறை என பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாய்கள் கொண்டு வரப்பட்டு மோத விடப்பட்டது., ஒவ்வொரு ஜோடி கடாய்களும் நேருக்கு நேர் மோத விடுவார்கள்

.10 முதல் 70 முட்டு வரை எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுஅதிகப்படியான எண்ணிக்கையில் மோதிக் கொள்ளும் கிடாய்களை வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். மேலும் இரண்டு கிடாய்களும் மோதிக் கொள்ளும் போது ஒரு கிடாய் தப்பி ஓடினால் களத்தில் இருக்கும் கிடாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் வெற்றி பெற்ற கிடாயின் உரிமையாளர்களுக்கு பித்தளை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.,மேலும் போட்டியில் பங்கு பெற்ற கிடாய்களுக்கு சில்வர் அண்டா மற்றும் மரக்கன்றுகள் கிராம கமிட்டியினரால் பரிசாக வழங்கப்பட்டது., இந்த போட்டியை வாலாந்தூர் செல்லம்பட்டி உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மட்டும் இளைஞர்கள் விசில் அடித்தும் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.,

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!