நூறு ஆண்டு கால வரலாற்றில் காணாத அளவு மழை பெய்து.. கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கேரள மக்கள் சொத்தை இழந்து, இருக்கும் இடத்தை இழந்து, கால்நடைகளை இழந்து, வயல் நிலங்களை இழந்து, பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தவர்களும் திக்கு திசை தெரியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்களும், அரசாங்க ஊழியர்களும், சமூக அமைப்புகளும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற அளவு கேரளா மக்களுக்கு உதவிகள் செய்தாலும் அவர்களுடைய இழப்புக்கு ஈடுகட்ட முடியாமலே உள்ளனர். இச்சமயத்தில் பல கோடிகளும் சிறு துளியாகவே உள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தின் உதவியை அதிகம் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் கேரள சகோதர, சகோதரிகள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டிய தருணம். கீழே உள்ள கேரள முதலமைச்சர் நிதிக்கு வாரி வழங்குங்கள், மற்றவர்களுக்கும் பரப்புங்கள். நாம் தனி நபராக ஒவ்வொருவரும் கொடுக்கும் சிறு தொகையும், பெரு உதவியாக இருக்கும். வங்கி கணக்கு விபரம் கீழே:-
Chief Minister’s Distress Releif Fund. Account No:67319948232 State Bank of India, City Branch Trivandrum.. IFSC code: SBIN 0070028
Contributions to the Chef Minister’s Releif Fund are 100% tax exempted (நன்கொடைக்கு 100% வரி விலக்கு உண்டு..)

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











