ரீல்ஸ் வெறியினால் அப்பாவி நபரின் உயிர் பலியான சோகம் – கேரளாவை உலுக்கிய சம்பவம்..
கோழிக்கோடு: இரு தினங்களுக்கு முன், ஷிம்ஜிதா என்ற பெண் பஸ்ல போகும்போது தன்னை அநாகரிகமாக ஓரு நபர் தொட்டுட்டார் என்று அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து
வீவர்ஸ் கூட கூடுதலாக அந்த நபரின் குணத்தை கேவலபடுத்தி, அவர் மீது வெறுப்பேற்றும் விதமாக பேசி இன்ஸ்டாவில் பதிவு போட அது Viral ஆகி உள்ளது.
பஸ்ஸில் கூட்ட நெரிசலில் அறிந்தோ அறியாமலோ செய்த ஒரு தவறுக்காக, அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோவால்…
37 வயதான தீபக் என்ற அந்த நபரை உறவினர்கள், அண்டை வீட்டார்கள், அக்கம்பக்கத்தினர்கள், வேலை பணியாளர்கள், பொது மக்கள், சோசியல் இன்ப்ளூயன்சர்கள் என அனைத்து தரப்பினர்களும்
அசிங்க அசிங்கமாகவும் கீழ்தரமாகவும் கமெண்ட் செய்தும், நேரிலும் கண்டு விமர்சிக்கவும் விசாரிக்கவும் செய்ய..
தன்னை அறியாமல் நடந்த சம்பவத்தால் அவமானமும், கவலையும், மன உளச்சலும் கொண்ட தீபக், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
விசயம் விஸ்வரூபம் ஆனது..
ஷிம்ஜிதாவின் ரீல்ஸ் பொறிக்கு இரையான தீபக்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, பலதரப்பினர்களும் கடும் கண்டனமும், போர்கொடி தூக்கி வருகின்றனர்.
பஸ்ஸில் பெண்ணை உரசினால் மீண்டும் உரசாதவாறு நீங்கியிருக்க முடியும், அல்லது அந்த இடத்திலே கண்டிக்கவும் முடியும்..
ஆனால் இதன் மூலம் பிரபலமும் லைக்கும் வேண்டுமே… Big boss ல் அடுத்த சீசனுக்கு வாய்ப்பும் கிடைக்கலாமே…
உண்மையில் அந்த வீடியோவில் ஷிம்ஜிதா வேண்டுமென்றே தீபக்கின் அருகில் ஒட்டி நிற்பது போலவும்,
ஒரு சாதாரண மனிதனை உசுப்பேற்றி நெருங்கி நின்று, அதன் பிறகு நடக்கும் நிகழ்வை அவருக்கே தெரியாமல் படம்பிடித்தது போலவும்,
பாலியல் சீண்டல் செய்த குற்றவாளி என கேவலபடுத்தி பேசி சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி சைபர் தாக்குதல் நடத்தியதன் விளைவு;
கண்ணியமான மனிதராக நடப்பவர் என ஊர் மக்களால் கூறுப்படும் தீபக், தன் மீது இப்படியொரு அவதூறு பரவுவதை தாங்க இயலாமல், தான் நிரபராதி குற்றமற்றவன் என்னை நம்புங்கள் என தனது உயிரை மாய்த்து கொண்டார்…
இதற்கு காரணமான ரீல்ஸ் வெறி ஷிம்ஜிதாவை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன்.
சட்டம் ,கோர்ட், காவல்துறை இதெல்லாம் சும்மா என்று நினைக்க வேண்டாம்.
சட்டத்தின் அனைத்து ஆதரவும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் தான் என பெண் வழக்கறிஞர் ஃபவுஸி ஹபீப் களமிறங்கியுள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









