அங்கன் வாடியில் பிரியாணி மற்றும் பொறிச்ச கோழி கேட்ட சிறுவனின் கோரிக்கையும் பரிசீலனை செய்யப்படும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் ஷங்கு என்ற பெயர் கொண்ட சிறுவன், தனது வீட்டில் உணவு சாப்பிடும் போது, தனது அம்மாவிடம் தனக்கு அங்கன் வாடியில் உப்புமா வேண்டாம் என்றும், பிரியாணியும், பொறிச்ச கோழியும் வேண்டும் என்றும் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சரை சென்றடைந்தது.

இந்நிலையில், இந்த வீடியோவை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அங்கன்வாடி சிறுவனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அமைச்சர் பதிவிட்டுள்ள வீடியோவில், வீணா ஜார்ஜ் கூறுகையில், “குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காகவே அங்கன் வாடிகளில் அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் அங்கன் வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. அங்கன் வாடிகளில் பல்வேறு வகையான உணவுகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. சிறுவனின் கோரிக்கையும் பரிசீலனை செய்யப்படும்” என்றார்.
You must be logged in to post a comment.