தமிழக கேரள எல்லை பகுதியில் வாத்து ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு..

தமிழக கேரள எல்லைகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுமார் 1000 வாத்துக்கள் மற்றும் வாத்து முட்டைகளை கேரளாவிலிருந்து ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது.

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிக்காக தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினர் கடந்த 90 நாட்களாக பணியில் அமர்ததப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் கோழி கழிவுகள், முட்டைகள், கோழிகள், காடை, வாத்து போன்றவை இருந்தால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து பணியில் இருந்த கால்நடை மருத்துவர் ராஜேஷ் கூறுகையில், 1000 வாத்துக்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல, அந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் இருக்க வாய்ப்புள்ளதால், இவை தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டால் பெரும் சேதத்தை விளைவிக்கும். எனவே இவை திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குனர் அவர்களின் அறிவுரையின் பெயரில் காவல் துறை உதவியுடன் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!