கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்.!- போலீசார் தடுத்து நிறுத்தியதால் லேசான வாக்குவாதம்..
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் நிதிப்பகிர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுமார் 100-கிராம் எடையுள்ள அல்வா பாக்கெட்டுகளை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கினர்.
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் ஏராளமான திமுகவினர் பேருந்து ஏற வந்த பயணிகளுக்கு அல்வா கொடுத்து மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்த நிதி பங்கீடு இதுதான் எனவும், மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி தமிழகத்திற்கு குறைவான நிதி அளித்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தெரிவித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முறையான அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்தில் கூட கூடாது என தெரிவித்தனர். இதனால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் பேருந்து பயணிகளிடம் அல்வா கொடுக்கும் போது மத்திய அரசுக்கு எதிராக வார்த்தைகளை கூறி அல்வா கொடுக்கும்போது எனக்கு வேணாம் நீங்களே எடுத்துக்கோங்க என பயணி அல்வாவை வாங்க மருத்த காட்சியும் அரங்கேறியது.
செங்கல்பட்டு- சக்திவேல்
You must be logged in to post a comment.