ஹைதராபாத்தில் நடந்த நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷனில் மூன்றாவது இடம் பெற்று கீழக்கரை மாணவன் அப்துல்லா சாதனை படைத்துள்ளார். நேஷனல் அகாடமி பள்ளியில் பயிலும் ஷகீல் மைதீன் என்பவரது மகன் அப்துல்லா என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த குவிஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார்.


இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இரு பள்ளிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி மற்றும் மதுரையைச் சார்ந்த மற்றொரு பள்ளி உள்ளிட்ட இரு பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.