கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்.மதுக்கடைகளை அகற்ற வில்லை என்றால் போராட்டம்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை அனைத்து கிளைகளின் செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கணைகள் கூட்டம் 27.7.2019 மாலை 7.00 மணியளவில் கீழக்கரை தெற்குகிளை மர்கஸில் நடைபெற்றது.இதில் கீழக்கரை 5 கிளைகள் மற்றும் நத்தம் கிளை நிர்வாகிகள் அணிச்செயலாளர்கள் மற்றும் செயல்வீராங்களைகள் கலந்துகொண்டனர்.

இதற்கு மாவட்டசெயலாளர் ஆரிப்கான் தலைமை வகித்தார் மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான், மாநிலத்தலைமை அறிவித்துள்ள ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான தொடர் பிரச்சாரத்தையும் வருகின்ற செப்டம்பர் 29 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற உள்ள”தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாடு”குறித்த விளம்பரங்களையும் கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வீரியத்துடன் கொண்டு செல்வதற்கான செயல்திட்டங்களை தொகுத்து வழங்கினார்.நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இறுதியாக மாவட்ட துணைச்செயலாளர் கீழை சித்தீக் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை கீழக்கரை தெற்குகிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!