தான், எனக்கு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்ந்து வரும் இன்றைய உலகில், மற்றவருக்கு வேலைவாய்ப்பை அடையாளம் காட்டுவதை பொழுது போக்காக “ KILAKARAI CLASSIFIED ONLINE” என ஆரம்பித்து இன்று அதையே முழு நேரமாக பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பல கதவுகளை திறந்துவிட்டிருக்கும் அளவுக்கு தனித்து நிற்கும் நிறுவனம்தான் “TRAVEL ZONE”.

இந்நிறுவனம் கீழக்கரை SKV சேக் என்பவரால் கடந்த 2014ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், அதன் சார்ந்த அனைத்து பணிகளையும் குறைந்த கட்டணத்தில் சேவை அடிப்படையில் மக்களுக்கு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சமூக சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் கடந்த நவம்பர் 2017ம் ஆண்டு அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பாக சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
அதுபோல் இந்த வருடம் (2018) ஜனவரி மாதம் 4ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சியும், காந்தி வோர்ல்ட் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய “100 இளைஞர்களில் நீங்களும் ஒருவரா?” என்ற நிகழ்வில் சமுதாயத்தில் மாற்றத்தை உண்டாக்க கூடிய இளைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிறுவனத்தின் சேவையை பற்றி SKV.சேக் கூறுகையில், “ கன்சல்டண்ட்ஸ் சேவையில், அமீரகம் (துபாய்) 30 மற்றும் 90 நாட்கள் டூரிஸ்டு மற்றும் விசிட் விசா, ஓமன், கத்தார், பஹரைன், சவுதி, மலேசியா, சிங்கபூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு டூரிஸ்டு விசா போன்ற சேவைகள்மட்டும் அல்லாது உள்நாடு மற்றும் வெளிநாடுளுக்கும் மிகக்குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள், குறிகிய கால பேக்கேஜ் எடுத்துத்தரப்படும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
மேலும் துபாய், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான இலவச ஆலோசனை மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு ரூம், பெட் ஸ்பேஸ் கூடிய விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா சேவை செய்து கொடுக்கப்படுகிறது. ஸ்பைஸ் ஜெட் & இன்டிகோ ஏர்லைன்ஸ் குரூப் டிக்கெட் (டிஸ்கவுண்ட்) சலுகை விலையில் புக்கிங் செய்து கொடுக்கிறோம். அமீரகம், சவூதி, கத்தார் உள்ளிட்ட வெளிநாடு வாய்ப்புகளுக்கான அனைத்தை விதமான சான்றிதழ் அட்டெஸ்டேஷன்களும் செய்து தரப்படும்”. என்றார்.

அவர் தொடர்ந்து இ சேவை மையம் பற்றி கூறும் பொழுது “ எங்கள் நிறுவனம் முழுமையாக மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற இ சேவை மையம் ஆகும். இங்கு அரசு சார்ந்த அடையாள அட்டைகள், அரசு மற்றும் பொது ஆவணங்கள் என அனைத்து விதமான ஆவணங்களும் எளியவகையிலும் சிறந்த முறையிலும் விண்ணப்பித்து தரப்படும். அதே போல் குடும்பத்தினருக்கு பான் அட்டை – PAN CARD (விண்ணப்பித்தல்). ஆதார் அடையாள அட்டை – Aadhaar Card (விண்ணப்பித்தல் /பிழை திருத்தம் செய்தல்), வாக்காளர் அடையாள அட்டை – ELECTION ID (ஆன்லைனில் விண்ணப்பித்தல் /பிழை திருத்தம் செய்தல், பாஸ்போர்ட் – PASSPORT ( ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் பெற்றுத்தருதல் /புதுப்பித்தல்), உங்களது வீடு, தோட்டம் மற்றும் சொத்துகள் தொடர்பான பட்டா /சிட்டா போன்ற ஆவணங்கள் இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து தருதல், வக்கீல்கள் மூலம் அஃப்பிடவிட் – AFFIDAVIT விண்ணப்பித்து எடுத்துத்தருதல், ஜாப் டைப்பிங் – JOB TYPING, பயோடேட்டா – BIO DATA (சுயவிவரக்குறிப்பு) தயார் செய்து தருதல் ஆகியன போன்ற சேவைகள் சிறந்த முறையில் செய்து தருகிறோம் என்றார். மேலும் வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கு உங்கள் வீட்டிலேயே வந்து அனைத்து வகையான ஆவணங்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ளவர்களுக்கு பான் அட்டை (PAN CARD) விண்ணப்பித்து பெறுவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.
இவர்களை அணுக கீழே உள்ள எண்ணில் வாட்சாப்பிலும் தொடர்பு கொள்ளலாம். விசா சம்மந்தமான விபரங்களுக்கு: டிராவல் ஜோன் கன்ஸல்டண்ட் டைமண்டு பிளாசா, முதல் மாடி, மார்க்கெட் எதிரில், கீழக்கரை, (இராமநாதபுரம் மாவட்டம்) eMail 📨 : [email protected]
📱 + 91 944 341 2896 ( I N D I A )
📱 + 91 999 499 5065 ( I N D I A )
📱 + 971 55 2371 271 (D U B A I )


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










