கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு! அகலாய்வாளர்கள் உற்ச்சாகம்!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 6 ம் கட்ட அகலாய்வில் விலங்கின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் அகலாய்வாளர்கள் உற்ச்சாகமடைந்துள்ளனர்.கீழடியில் தமிழக தொல்லியல் துறையினரால் 6 ம் கட்ட அகலாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஏற்கனவே கீழடியில் 5 கட்ட அகலாய்வு பணிகள் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு, கீழடியை சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை என 4 இடங்களிலும் அகலாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கொந்தகையில் கடந்த மார்ச் மாதம் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கொராணா விடுமுறைக்கு பின்னர் நேற்று மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்த நிலையில், தற்போது முதன் முறையாக நீளமான முதுகொலும்பு மற்றும் விலா எலும்புகளுடன் கூடிய விலங்கின் எலும்புக்கூடு தற்போது தென்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் அகலாய்வாளர்கள் உற்ச்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே 4 ம் கட்ட அகலாய்வில் திமிலுடன் கூடிய காளைமாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட விலங்கு எத்தகையது என்பது அகலாய்வு குழியை முழுமையாக தொண்டிய பின்னரே தெரிய வரும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!