கீழடி அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆயுத்த பணிகள் தீவிரம்..

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று அகழாய்வுகள் இந்திய தொல்லியல் துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5 ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்பட்டது.

தற்போது பிப்ரவரி 19ம் தேதி முதல் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கொந்தகை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அருகில் உள்ள திடலில் தற்போது ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன.

விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தேதியை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த தமிழினமே எதிர்பார்த்த கீழடி அருங்காட்சியகம் காண அடிக்கல் நாட்டு விழா விரைவில் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்…..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!