தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வு அறிக்கையினை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் -அமைச்சர் தங்கம் தென்னரசு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வு அறிக்கையினை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உலகளவில் பேசப்படும் அளவில் கீழடி அருங்காட்சியம் விரைவில் அமையும் என்றவர். தொல்லியல் துறை அகலாய்வில் தமிழ்நாடு 2600 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளதாகவும், கீழடி அகழ்வாய்வில் முதல் முறையாக முழுமையாக குறுவாள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!