கீழக்கரையில் இன்று (26-12-2016) கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை (KKCDT- Kilakarai City Development Trust) சார்பாக கலந்துரையாடல் மற்றும் அறிமுக கூட்டம் காலை 11.40 மணியளவில் முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் , ஜமாத்தார்கள் மற்றும் பல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி சகோ.அஹமது ரிபாய் அவர்களின் அறிமுகத்துடன் தொடங்கி, ஜனாப்.நிஜாமுதீன் அவர்களின் கிராத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சகோ.யூசுஃப் சாஹிப் அவர்கள் வரேவேற்புரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையை சார்ந்த சகோ.சேக் தாவூத் அவர்கள் திட்ட அறிமுக உரையை வழங்கினார், அவ்வுரையில் திட்டம் ஆரம்பம் செய்யப்பட்ட விதம் மற்றும் அறக்கட்டளை உருவான
வழிமுறைகளை விளக்கினார்.
அந்நிகழ்ச்சியில் திட்ட தொகுப்புரையை கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் டிரஸ்டி சகோ. BSA. அஹமது புஹாரி அவர்கள் நீண்ட அறிமுக உரையுடன் வழங்கினார். அவருடைய உரையைத் தொடர்ந்து கீழக்கரைப் பற்றிய Slide Show ஒளிபரப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து திட்ட விளக்கவுரையை INOX அமைப்பின் மேலாளர் திரு.ஆனந்த் மகாதேவன் அவர்கள் இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் செலவினங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி விளக்கி கூறினார். மேலும் இத்திட்டத்திற்கு ஏற்படப்போகும் செலவினங்களையும் மேல் அதிக விபரங்களுடன் விளக்கினார்.அவருடைய உரையைத் தொடர்ந்து கீழக்கரையைப் பற்றிய காட்சிகள் திரையிடப்பட்டது.

பின்னர் அதைத் தொடர்ந்து டிரஸ்ட் உருவாக்கப்பட்ட முயற்சிகளும் ஒத்துழைத்தவர்களுக்கும் நன்றிகள் கூறப்பட்டன. மேலும் கருவேல மரத்தின் தீமைகள் மற்றும் அதை நீக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. அதே சமயம் கீழக்கரையின் பிரதான பிரச்சினையாக திடக்கழிவு நிர்வாகம் (Solid Waste Management) பற்றிய அவசியமும் விளக்கப்பட்டது. இந்த வளர்ச்சி திட்டத்திற்காக ஆர்வமுள்ளவர்களின் பங்களிப்பையும் விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் வாழ்த்துரையை ஜனாப். அஹமது ஹுசைன் , ஜனாப். சாதிக் அலி, டாக்டர். ரஹ்மத் ஆயிஷா, ஜனாப்.சலாஹுதீன், ஜனாப். ஜமால் , ஜனாப். ஹபீபுல்லாஹ் , சகோதரி.சர்மிளா, சகோதரி. சித்தி பசீரா, சகோதரி. சரீஃபா, சகோ.அஹமது ஹுசைன் லாஃபிர், சகோ.ஆபித் ஜுனைத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் உரையாற்றி, நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









