கடையநல்லூரில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புளியங்குடி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் பொது நல அமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் காந்தி, ஆலோசகர் கிரகோரி பால சுப்ரமணியன், நல் நூலகர் முத்து மாணிக்கம் ஆகியோர் காவலர்களின் சேவையை பாராட்டி தலைமை காவலர் முத்துராஜ், முதல் நிலை காவலர்கள் கனிராஜ், சங்கர், அப்துல் கனி, கருப்பசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். காவல் நிலைய எழுத்தர் தங்கத்துரை நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.