திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!
இன்றும் அழியாத ஃபிர்அவ்னின் உடல்.!
கப்ளிசேட்:
அத்தியாயம் 1
எனினும் உனக்கு பின்னுள்ளவர் களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலை பாதுகாப்போம்.நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”.(அல்குர்ஆன் 10:92).
சாக்கடல் (Dead sea) என்பது ஒரு ஆச்சரியம். சாக்கடல் என்று அழைக்கப்பட்டாலும் அது கடல் அல்ல அது ஒரு உப்பு ஏரி.சாக்கடலின் மேற்கே இஸ்ரேல்,மற்றும் பாலஸ்தீனமும், கிழக்கே ஜோர்டானும் அமைந்துள்ளன.
மூன்றுபுறமும் நிலத்தால் சூழப்பட்ட சாக்கடலுக்கு ஜோர்டான் ஆறு மற்றும் ஓடைகளிலிருந்து நீர் வருகிறது.
சாக்கடலின் உப்புத்தன்மை பொதுவாக 34.2% அதிகமாகவும்,மற்ற கடல்களைவிட 9.6%அதிகமாகவும் இருப்பதால்,
இதன்நீரின் அடர்த்தி மனித உடலைவிட அதிக அடர்த்தியானதாகும். ஆகவேதான் சாக்கடலில் நீந்துபவர்கள் அப்படியே மிதக்கிறார்கள்.
ஆகவேதான் சாக்கடலில் மீன்கள், தாவரங்கள் என்று எந்த உயிரினமும் உயிர்வாழ முடிவதில்லை.
சாக்கடலில் நீந்தும் போது வானத்தை பார்த்த மாதிரி படுத்தநிலையில் நீந்த வேண்டும்.
தப்பித்தவறி குப்புறவிழுந்து விட்டால் வாய்க்குள்ளும், நுரையீரலுக்குள்ளும் உப்புநீர் புகுந்துவிட்டால் உயிர்போய்விடும்.
சாக்கடலைச்சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு ஏராளமான உப்புகள் தயாரிக்கப் படுகின்றன.
“பொட்டாஷ் உப்பு எடுக்கப்பட்டு உரம்தயாரக்கப் பயன் படுத்தப்படுகிறது.
சாக்கடல் “அஸ்ஃபால்ட்”என்னும் நிலக்கீல் உப்பை வெளித்தள்ளிக் கொண்டே இருக்கும்.
இந்த உப்பு பொருட்களை பதப்படுத்த பயன்படுத்தப் படுகிறது.
இந்த நிலக்கீல் உப்பைப் பயன்படுத்தி “மம்மிகளை” பதப்படுத்தினர்.
பல நூற்றாண்டுகளை கடந்தும் “மம்மிகள்” இன்றும் கெடாமல் இருப்பது ஆச்சரியம்.
ஃபிர்அவுன் என்னும் கொடுங்கோலனின் உடலை அல்லாஹ் பாதுகாப்பதாக அறிவித்தாலும்,
நமது பகுத்தறிவின்படி, இதுபோன்ற உப்புகள் ஃபிர்அவ்னின் உடலை இன்றளவும் அழியாமல் வைத்திருப்பதை கண்டுவருகிறோம்.
1898 ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு பள்ளத்தாக்கில் “மம்மி” ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எலியட்ஸ்மித் என்பவரிடம் இதனை முழுவதுமாக ஆராய்ச்சி செய்ய 1907 ஆம் ஆண்டு எகிப்திய அரசு ஒப்படைத்தது.
அவர் முழுமையாக ஆராய்ச்சி செய்து இது ஃபிர்அவ்னின் (இரண்டாம் ராம்சேஸ்) உடல்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
தொல்பொருள் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரான்ஸ் நாடு ஃபிர்அவ்னின் உடலை எகிப்திய அரசிடம் கேட்டு வாங்கியது.
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர்.மோரீஸ் புகைல் தலைமையிலான குழு இந்த உடலைஆராய்ச்சி செய்தது.
அந்த உடலில் படிந்திருந்த உப்பின் துணுக்குகளை வைத்து அது கடலில் மூழ்கி இறந்த உடல் என்றும் அது 5000 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னனின் உடல் என்றும் முடிவு செய்து,
உயர்ந்த கண்ணாடிப் பேழையில் வைத்து எகிப்திற்கு அனுப்பியது ஃபிரான்ஸ்.
இன்றும் எகிப்தின் கெய்ரோ அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியை நேரடியாக காணுகின்றனர்.
சவூதிஅரேபியாவில் நடந்த மருத்துவ அறிவியல் மாநாட்டில் டாக்டர்.மோரீஸ் புகைலும் கலந்து கொண்டார்.
அப்போது திருக்குர்ஆன் கூறும் ஃபிர்அவ்ன் பற்றிய வசனம் கூறப்பட அதுவே ஃபிர்அவ்னின் உடல் என்று உறுதிப்படுத்திய புகைல் உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
திருக்குர்ஆனின் ஒளியில் மற்றொரு அறிவியல் ஆச்சரியத்தை தொடர்ந்து ஆராய்வோம்..!

