காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாபேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்ரமணியன் உயிரிழந்ததாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் தனது மகன் இறந்தது குறித்து எந்த தகவலும், தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், உறுதியான தகவல் தெரியாத காரணத்தினால்
குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்துவதற்காக கூற வேண்டும் என்று, செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியனின் தந்தை கணபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியை சேர்ந்த கணபதி என்பது மகன் சுப்பிரமணியன்(28). ஐடிஐ படித்துள்ள சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். போலீசில் சேர்ந்தார். உத்திரபிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சென்னை காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி, என்ற மனைவி உள்ளார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.குழந்தைகளை இல்லை. தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குடும்பத்திற்கு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு உறுதி படுத்தி தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரமணி தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









