கீழக்கரை நகரில் நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியிலும், பெத்தரி தெரு, கஸ்டம்ஸ் ரோடு, புது கிழக்குத் தெரு, வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் அசன் ஹக்கீம் கூறும் போது ”இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு அலுவலக வளாகங்களிலேயே இது போன்று கருவேல மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. உடனடியாக கீழக்கரை நகரின் அனைத்து தெருக்களிலும் மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் இடத்தில் நிற்கும் கருவேல மரங்களை அகற்ற முறையாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் அகற்றாத போது அபராதம் விதிக்க தயங்க கூடாது” என்று தெரிவித்தார்.


நம் மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த கருவேல மரங்களை அகற்ற நகராட்சி நிர்வாகத்தோடு சமூக நல அமைப்பினரும், பொதுமக்களும், சமுதாய கட்சியினரும் ஒருங்கிணைந்து செயலாற்றி கீழக்கரை நகரை கருவேல மரங்கள் இல்லாத செழிப்பான நகரமாக மாற்ற அனைவரும் முன் வர வேண்டும்.
கீழை நியூஸ் அரசாங்க ஆணை வெளியிட்டதிலிருந்து பல வகையான விழிப்புணர்வு செய்திகளையும், அதன் சார்ந்த சமூக அமைப்புகள் செய்து வரும் பணிகளையும், செய்திகளையும் மக்களுக்கு உடனுக்குடன் எடுத்துரைத்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் கருவேல மரங்களை அழிக்க உதவி வரும் கல்லூரிக்கு எல்லா வகையான ஆதரவும், பொருளாதார உதவிகளையும் கீழை நியூஸ் இணைய தளம் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதே போல் இந்த வாரம் கீழை டி.வி யூடியூப் சேனல் வழியாக கருவேல சிறப்பு பதிப்பு வெளிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









