14.03.2017 அன்று சவேரியார் பட்டிணம் தூய சவேரியார் குளுணி உயர் நிலைப் பள்ளியில் உள்ள ஜூனியர் ரெட் கிராஸ் ( Junior Red Cross) மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 47,912 எண்ணிக்கையில் கருவேல மரக்கன்றுகளை பள்ளி வளாகத்திலிருந்தும் சுற்றுப் புறங்களில் இருந்தும் வேருடன் அப்புறப்படுத்தி சாதனை படைத்தார்கள்.

இந்த அரிய பணியை செய்த பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (பரமக்குடி கல்வி மாவட்டம்) தெ. பாலசுப்பிரமணியம் பரமக்குடி கல்வி மாவட்ட ஜே. ஆர்.சி. கன்வீனர் எஸ். அலெக்ஸ், தலைமை ஆசிரியை ஜே. கிளாரா, ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் துணைச் சேர்மன் எஸ். ஹாரூன், பொருளாளர் சி. குணசேகரன் , தூய யாகப்பர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் D.ஜேம்ஸ் ராஜா ஆகியோர் ஊக்கப் பரிசுகள் வழங்கினார்கள்


சிறப்பு பரிசுகள் பெற்ற மாணவ, மாணவியர்கள் கீழே வருமாறு:-
I M. அனுசியா – 9 ம் வகுப்பு 3694 II J. மாலினி – 6 ம் வகுப்பு 2217 III M.மௌலின் நிஷா – 8 ம் வகுப்பு 2000
——————————————- I M. பாலமுருகன். – 5 ம் வகுப்பு 700 II A. ஆரோவின்சி. – 1 ம் வகுப்பு 454 III X. ஜெனிலியா. – 1 ம் வகுப்பு 416


இதுபோன்ற பணிகளை செய்து வரும் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்பரிசுகள் கொடுத்து ரோட்டரி சங்கத்தினர் பல இடங்களிலும் உற்சாகபடுத்துவது குறிப்பிடத்தக்கது.




Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









